Apr 8, 2013

டீக்கடைகளில் சோதனை பொருட்களில் கலப்படம் உள்ளதா என ஆய்வு


டீக்கடைகளில் சோதனை பொருட்களில் கலப்படம் உள்ளதா என ஆய்வு
நாகை, ஏப்.8:
கந்தூரி விழாவையொட்டி நாகூரில் உள்ள ஓட்டல், டீக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகளில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா வரும் 11ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கந்தூரி விழாவிற்கு வெளி மாவட் டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து நாகூருக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தரமான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்யும்படி மாவட்ட கலெக்டர் முனுசாமி, உணவு பாது காப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, நாகை நகராட்சி உணவு பாது காப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆண்டனி, மகாராஜன், சதீஸ்குமார், பிரவின்ரகு ஆகியோர் கொண்ட குழுவினர் நாகூர் கடைத்தெருவில் ஆய்வு மேற்கொண்டனர்.
நாகூர் கடைத்தெருவில் உள்ள மளிகைகடைகள், ஓட்டல் மற்றும் டீக்கடைகள் ஆகியவற்றில் ஆய்வு செய் தனர். அப்போது காலாவதியான உணவு, கலப்பட டீ விற்பனை செய்யப்படுகிறது, சுத்தமான சுகாதாரமான உணவு தயாரிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் நாகை நகரர்டசி உணவு பாதுகாப்பு அலுவ லர் அன்பழகன் கூறும் போது, நாகூருக்கு வரும் பக்தர்கள் உணவு பொருட்களை வாங்கும் போது தயாரிக்கப்பட்ட தேதி, தயாரித்தவரின் முழு முகவரி, காலாவதி ஆகும் தேதி ஆகிய விவரங்கள் இருக்கிறதா என சரிபார்த்து வாங்க வேண் டும். திறந்த நிலையில் விற்பனை செய்யப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். உணவு விற்பனை தொடர் பான புகார்களை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்திற்கு 04365 247060 என்ற தொலைபேசி எண்ணி லோ அல்லது உணவு பாதுகாப்பு அலுவலருக்கு 94435 26579 என்ற எண்ணி லோ தொ டர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.