Jun 9, 2013

Dinakaran




சேலத்தில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

சேலம்
தமிழகத்தில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் பான்பராக், குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், சேலம் தாதகாப்பட்டி கேட், நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த குடோன் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலு, திருமூர்த்தி, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சரவணன், சங்கர், சேகர் ஆகியோர் நேற்று மாலை அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது ஒரு மொத்த விற்பனை கடையில் சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், வருகிற 22–ந் தேதிக்குள் அரசு உத்தரவுப்படி போதை பொருட்களை கடைகளில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்றும் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அதிகாரிகள் வினியோகம் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்ற 75 பேர் மீது வழக்கு வாலிபர் கைது

ஈரோடு
தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலாவை விற்பனை செய்ததாக ஈரோடு மாவட்டத்தில் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பான்மசாலா, குட்காவுக்கு தடை
குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து கடைகளில் குட்கா, பான்மசாலாவை விற்பனை செய்யக்கூடாது என்று கடையின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்படும் கடை உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் கைது
ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு கொங்காளம்மன்கோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் கடையின் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பகவான்ஜி என்பவரின் மகன் நரியங்காராம் (வயது 26) என்பவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
75 பேர் மீது வழக்குப்பதிவு
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் போலீசார் நடத்திய சோதனையில் ஈரோட்டில் 7 பேர், பவானியில் 10 பேர், கோபிசெட்டிபாளையத்தில் 26 பேர், சத்தியமங்கலத்தில் 18 பேர், பெருந்துறையில் 14 பேர் என 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Dinakaran


உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தால் கிராம பொருளாதாரத்துக்கு ஆபத்து - சந்தைகள் காணாமல் போகும்


கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் காந்தி. நம் நாட்டின் அடிப்படை பொருளாதார வளர்ச்சி கிராமங்களில் இருந்து தான் துவங்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் கிராம பொருளாதாரத்தையே சீர் குலைக்கும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் வணிகர்கள். இந்த சட்டம் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படும்போது பாரம்பரியம் மிக்க கிராம சந்தைகள் காணாமல் போய்விடும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
உணவு கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் கடந்த 2006ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கான விதிகள் 2011ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு அனைத்து மாநில அரசுகளும் இதை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியது. மத்தியப்பிரதேச மாநிலம் இதை உடனடியாக முழுமையாக நிறைவேற்ற முடியாது, இந்த சட்டத்தில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். அதனால் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அறிவித்தது.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவு பொருட்களில் சட்டத்தை மீறி கலப்படம், தயாரிப்பு குறைபாடுகள், பொருட்களின் தரம் மற்றும் காலாவதியாகும் நாள் போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறியிருந்தால் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
இந்த சட்டத்தில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள உணவு பொருள் தயாரிப்பாளர்கள், உணவு பொருள் விற்பனையாளர்கள், சிறு சில்லறை வணிகர்கள் கடுமையாக ஆட்சேபித்து வருகின்றனர். இதில் விவசாயிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் நிபந்தனைகள் இருப்பதால் பெரிய அளவில் அவர்களும் நஷ்டப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
விதிக்கப்பட்ட நிபந்தனையின்படி, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு எடுத்து வரும் போது சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரத்தின்படி அப்பொருட்கள் இல்லை எனில் எந்த ஒரு வணிகரும் அதை கொள்முதல் செய்ய முன்வரமாட்டார்கள். இதனால் விவசாயிகள் தங்கள் பொருட்களை வேறு வழியின்றி அழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதன்பின் அந்த விவசாயியின் நிலை என்னவாகும் என்பதை இச்சட்டம் கண்டு கொள்ளவில்லை என்கின்றனர் விவசாயிகள்.
அதே போல் தயாரிப்பாளர்களுக்கும் அவரின் ஆலைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளும் ஏற்க முடியாத வகையில் உள்ளதாக கூறுகின்றனர். சட்டத்தில் சொல்லப்படுகின்ற நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமானால் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், வணிகர்களுக்கும் கூடுதல் முதலீடு தேவைப்படும். ஆனால் இன்றைய நிலையில் இப்படி கூடுதல் முதலீடு செய்வதற்கு வணிகர்கள் யாரும் தயாராக இல்லை.
மேலும் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிலகங்களிலும், உணவு பொருள் வணிக நிறுவனங்களிலும் வேலை செய்யும் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மிக மிக கடுமையானவை. குறிப்பாக 3 மாதத்திற்கு ஒரு முறை அந்த பணியாளர்கள் தங்கள் உடல்நிலை குறித்த மருத்துவ சான்றிதழை வழங்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. இது கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புற தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வேலைக்கு வரும் நபர்களை பெருமளவு பாதிக்கும். இதனால் அவர்களுக்கு பொருளாதார சிதைவு ஏற்படும்.
இது குறித்து சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன் கூறியதாவது:
நடைமுறைக்கு கடினமாக இச்சட்டங்களையும், விதிகளையும் அமல்படுத்துவதற்கு முன்பாக, நம் நாட்டு பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமான கிராமப்புற உற்பத்தி மற்றும் வணிக நடைமுறைகள் பற்றி ஆராயாமல் எடுக்கப்பட்ட அவசர முடிவாகவே இச்சட்டம் குறித்து எண்ணத் தோன்றுகிறது.
மறைமுகமாக சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட நிலையாகத்தான் இச்சட்டத்தின் நிபந்தனைகள் குறித்து எண்ண வேண்டியுள்ளது. அன்னிய நாட்டு மிகப்பெரும் பணக்கார குழுமங்களுக்கு சாமரம் வீசும் சட்டமாகவே இச்சட்டம் சிறு வணிகர்களால் நோக்கப்படுகிறது.
பேரம் பேசி தேவையான பொருட்களை வாங்க நினைக்கும் மக்கள் நிறைந்த கிராமங்களை அதிகளவில் கொண்டது நம் நாடு. இவர்கள் கிராமங்களில் வாரம் தோறும் கூடும் சந்தையை நம்பித்தான் உள்ளனர். அவர்களிடம் பொட்டலப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். உயர்தர பாதுகாப்பு கொண்ட உணவு பொருட்களை மட்டுமே உணவுக்காக பயன்படுத்த வேண்டும் என்று எப்படி வற்புறுத்த முடியும்?
கிராமத்தில் ஒரு திறந்த வெளியில் மண் திட்டில் தற்காலிக கூடாரம் அமைத்து அதில் ஒரு நாள் வியாபாரம் செய்யும் இவர்கள் முறைப்படி கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் வியாபாரம் செய்ய வேண்டும். விற்பனை பொருட்கள் திறந்த நிலையில் இருக்க கூடாது. பொட்டலத்தில் அடைக்கப்பட்டு தான் விற்க வேண்டும். அதில் லேபிள், முகவரி, எம்ஆர்பி ரேட், காலாவதி தேதி அனைத்தும் இருக்க வேண்டும் என்று கூறினால் பேரம் பேசி வாங்கும் வாரச்சந்தையில் இதற்கு சாத்தியமில்லை.
கண்டிப்புடன் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் கிராமச் சந்தைகள் இல்லாமல் போகும். கிராமப்புற பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விடும். கிராமப்புற பொருளாதாரம் சிதைவடையத் தொடங்கினால் அது மாநில பொருளாதாரத்தை சீர் குலைக்கும். இதன் காரணமாக நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் அது பாதிக்கும். கிராமப்புற சந்தை வணிகம் பாதிக்கப்பட்டால் நாட்டின் ஒட்டு மொத்த உணவு தானிய வணிகம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை மத்திய அரசு பரிசீலனைக்கு ஏற்றுள்ளதாக தெரியவில்லை. அதுமட்டுமன்றி, கிராம பொருளாதாரம் சீர் குலைந்தால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
கிராமத்தில் இருந்து நகர்புறத்திற்கு வரும் பொருட்கள் குறையும். இதனால் விலைவாசி உயரும். விவசாயத்தில் சரியான வளர்ச்சி இல்லையென்றால் கிராம மக்கள் தங்கள் தேவைக்காக நகர்புறத்தை நாட வேண்டியிருக்கும். இதனால் நுகர்பொருட்களுக்கு தேவை அதிகமாக ஏற்பட்டு விலை உயரும். விவசாயிகளின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதால் அது மாநிலத்தையும் பாதிக்கும்.
மக்கள் அனைவருக்கும் தரமான உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதை மாற்று வழியில் எப்படி நிறைவேற்ற வேண்டுமோ அப்படி நிறைவேற்ற முன்வராமல் சட்டம் என்ற சாட்டையை சுழற்றினால் பாதிக்கப்படுவது அனைத்து தரப்பு மக்களும் தான் என்கிறார் ஜெயசீலன்.

கிராமப்புறங்களில் வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை கூடும் சந்தைகள் தான் அப்பகுதி மக்களின் அன்றாட உணவு தேவைகளை நிறைவேற்றும் களமாக இருக்கிறது. இந்த சந்தை வணிகம் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் பேரத்தின் அடிப்படையிலேயே கிராம மக்கள் இந்த சந்தையில் தங்களுக்கு தேவையானதை கொள்முதல் செய்வார்கள். இப்படிப்பட்ட நிலையில், இந்த உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டப்படி கிராமப்புற சந்தைகள் இயங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பெரும்பாலான சந்தைகள் மூடப்படும் நிலையே ஏற்படும். இதன் விளைவாக கிராமப்புற பொருளாதாரம் தாழ்வு நிலைக்கு சென்று விடும் என்கின்றனர் வணிகர்கள்.

சரம், சரமாக தொங்கும் குட்கா, பான் மசாலா: காற்றில் பறந்தது தடை உத்தரவு


கோவை :தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலை கலந்த உணவு பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், கடைகளில் அவற்றின் விற்பனை தாராளமாக உள்ளது. அரசாணையை அமல்படுத்த கமிட்டி அமைக்கும் அதிகாரிகள், காலத்தை விரயமாக்காமல் களத்தில் குதிக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவன ஆய்வில், "நடுத்தர வயது இளைஞர்கள், பெண்கள், குட்கா, பான்மசாலா, புகையிலை கலந்த உணவுப்பொருட்களை உட்கொள்வதால் பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாகின்றனர். புற்றுநோய் தாக்குதலில் 80 சதவீதம் லாகிரி வஸ்துகளால் ஏற்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த மாதம் 23ம் தேதி, தமிழக அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிட்ட (எண் 132) அரசாணையில், ""உணவுப்பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, குட்கா, பான்மசாலா பொருட்கள், புகையிலை, நிகோடின் கலந்த உணவு பொருட்களை தமிழகத்தில் இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ, ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது'' என, குறிப்பிட்டுள்ளது.
குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை இருப்பு வைத்திருந்தால், முழுமையாக அப்புறப்படுத்த ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் வரும் ஜூன் 22ம் தேதிக்குள் குட்கா, பான்மசாலா அப்புறப்படுத்த வேண்டும். அரசாணையை அமல்படுத்த, மாவட்ட கலெக்டர் தலைவராக கொண்ட கமிட்டி அமைக்கப்படுகிறது. உணவுப்பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் ஒருங்கிணைப்பாளராகவும், எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர், துணை இயக்குனர் (சுகாதாரம்) உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளை கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கவும், பணிகள் தீவிரமாக நடக்கிறது. லாகிரி வஸ்துகளை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டாலும், சிறிய பெட்டிக்கடை முதல், பெரிய மளிகை கடை வரையிலும் லாகிரி வஸ்து பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.கோவையிலுள்ள பெட்டிக்கடைகளில் குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் சரம் சரமாக தொங்க விடப்பட்டுள்ளன. போலீஸ் கெடுபிடியுள்ள பகுதிகளில் மறைமுக விற்பனை நடக்கிறது. அரசின் தடையுத்தரவால், ஒரு பாக்கெட்டின் விலை 20 ரூபாயில் துவங்குகிறது. 
மக்களிடையே புழக்கத்தில் புரையோடி கிடக்கும், குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை கட்டுப்படுத்த, அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது; நுகர்வோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசாணையை அமல்படுத்த கமிட்டி அமைக்கும் அதிகாரிகள், காலத்தை விரயமாக்காமல் களத்தில் குதிக்க வேண்டும்.
கோவை மாவட்ட உணவுப்பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் கதிரவனிடம் கேட்டபோது, ""கலெக்டர் தலைமையில் எட்டு துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வருவதை செக்போஸ்ட்களில் தடை செய்யவும், உள்ளூர் கடைகளில் ஆய்வு செய்யவும், விற்பனை செய்தால் பறிமுதல் செய்து அழிப்பது, விற்பவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்'' என்றார்.
தடையை மீறினால்?
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் இருப்பு வைக்கவும், விற்கவும் ஓராண்டுக்கு மட்டும் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கமிட்டி அமைத்து கண்காணித்தாலும், இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில், தடையை மீறி இவை விற்கப்பட்டால், நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்றால், அவற்றை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என்பது மட்டுமே உணவு பாதுகாப்புசட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கமிட்டியில் போலீசாரும் சேர்க்கப்பட்டுள்ளதால், லாகிரி வஸ்துகள் விற்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கையும் பாயும் நிலையுள்ளது.

ரயிலில் வந்த புகையிலை பண்டல்கள் பறிமுதல்

மதுரை: சென்னையிலிருந்து மதுரைக்கு, பாண்டியன் ரயிலில் வந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பண்டல்களை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அரசு தடை செய்துள்ளது. அதையும் மீறி விற்பவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தென் மாவட்டங்களுக்கு தேவையான புகையிலை பொருட்கள் ரயில்களில் அனுப்பப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், ரயிலில் வந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்றும், சென்னையிலிருந்து மதுரை வந்த பாண்டியன் ரயிலில், 60 பண்டல்கள் இருந்தன. அவற்றில் முகவரி தெளிவாக இல்லை. போலீசார் சோதனையிட்ட போது, புகையிலை பொருட்கள் (ஹான்ஸ்) இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார், இன்வாய்ஸ் மூலம், எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது என, விசாரிக்கின்றனர். "இதில் தொடர்புடையவர்கள், ஓரிரு நாளில் கைது செய்யப்படுவர்' என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Shortage of food inspectors hits gutka ban implementation


 

The implementation of the much-touted gutka ban has hit a roadblock due to severe shortage of food inspectors in the State. According to health department officials, against a minimum requirement of 210 food inspectors, currently there are only 85.
Gutka ban is being implemented under the Food Safety and Standards Authority Act and requires qualified graduates of pure sciences (chemistry or biology) to serve as food inspectors. The department has placed advertisements, calling for applicants to fill the vacancies.
Meanwhile, the Health department, officials said, has approached the Home department for help to implement the ban. According to M Madan Gopal, Principal Secretary to the Health and Family Department, they had requested the Director General and Inspector General of Police (DG&IGP) to ensure that police personnel across the State apprehend those selling gutka.
“When the ban on smoking in public spaces was implemented, we got the co-operation of the police department. Similarly, we are seeking their co-operation to implement the gutka ban,” Gopal said. The Health department has also sought the support of urban local bodies (ULBs) and orders are being issued by the Urban Development department to chief officers of the ULBs to implement the ban.
Currently, the State government has sealed all gutka manufacturing units in Karnataka. On alternative employment for those working in the manufacturing units, the State has asked the owners to shift production to non-tobacco or non-nicotine based arecanut products.
‘No impact on growers’
The State government has said there will be no impact of the gutka ban on arecanut growers in the State. Horticulture department principal secretary M K Shankarlinge Gowda said the areca grown in the State is never utilised in the manufacture of gutka.
“We are likely to see only a small percentage of arecanut growers who may be impacted by the gutka ban. But, they can change their land use to plantations or other such activities. The arecanut used in the manufacture of gutka is the reject of the actual arecanut,” he said. Most of the arecanut used in the manufacture of gutka comes from outside the country and only 25 per cent is from the State.
On the Gorakh Singh Committee report, Gowda said the measures recommended in the report had already been taken and farmers in Chikmagalur and Shimoga are being encouraged to grow alternative crops. On loan waiver, Gowda said only those loans obtained from co-operative societies by arecanut growers can be waived of.
“For those who have sought loans from nationalised banks, it is the Centre which has to take the call,” he said.