Sep 23, 2013

'Tsunami meat' reporting gets Rs 1 lakh reward

The Bakers Association Kerala (BAKE) has offered a reward of Rs 1 lakh for those who report the presence of ‘Tsunami meat’, which is being sold in Kerala after being brought from Tamil Nadu. The information can be handed over to the BAKE, food safety officer, Corporation/municipality/panchayat health inspectors. BAKE had sumbitted a memorandum to the Excise Fisheries Minister K Babu seeking intervention of the Crime Branch in tracing the sale of Tsunami meat.
State president P M Sankaran, organising secretary Royal Noushad, state secretary A Noushad, state committee member Royal Mohanan were part of signing the memorandum. The public should raise a hue and cry about such meat being sold in the market, the association members stated.
The meat is known as Tsunami meat as it contains meat waste and meat leftovers including cattle head, liver portions and intestine parts. The meat is mixed with good meat and sold at a lesser price.

பாப்பிரெட்டிப்பட்டியில் காலாவதியான தண்ணீர் கேன்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

பாப்பிரெட்டிப்பட்டி ,செப். 21:
பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பொம்மிடி பகுதிகளில் தரமற்ற உணவு பண்டங்கள் விற்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து அங்குள்ள கடைகளில் தர்மபுரி மாவட்ட நியமன அலுவலர் தினேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, பான்பாரக் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் காலாவதியான தண்ணீர் கேன்களையும் விற்பனை செய்தது கண் டுபிடிக் கப்பட்டது. உடனே, அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்

மதிகோன்பாளையம் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி பான்பராக், ஹான்ஸ் பறிமுதல்

தர்மபுரி, செப்.21:
தர்மபுரி மதிகோன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மளிகை கடை, டிபன் கடை, ஓட்டல் சில்லி சிக்கன் உள்ளிட்ட கடைகளில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் தலைமையில் அலுவலர்கள் நாகராஜன், நந்தகோபால், குமணன், சிவமணி ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். பான்பராக், ஹான்ஸ், போதைதரும் புகையிலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாத குடிநீர், லேபிள் இல்லாத வர்க்கி, பன் உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து அளித்தனர்.
இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம். லேபிள் இல்லாத குடிநீரை தரையில் கொட்டினர். இதன் பின்னர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
இல்லையென்றால் பறிமுதல் செய்து அழிக்கப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

மெல்ல கொல்லும் குடிநீர் ‘பாட்டில்கள்’ ?

மதுரை, செப். 23:
குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ‘1’ இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.
எண் ‘2’ இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ‘3’ என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ‘4’ எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.
எண் ‘5’ பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ‘6’ இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ‘7’ இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.
இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.
தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ‘மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ‘ஒன்ஸ் யூஸ்’ பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ‘மெல்லக் கொல்லும் விஷமாகி’ நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்’ என்றார்.

Now, quality standards for all olive oil types

PUNE: All varieties of olive oil will now have to conform to the quality standards laid down by the Food Safety and Standards Authority of India (FSSAI).
The quality parameters, which were earlier applicable only to virgin olive oil, refined olive oil and refined olive-pomace oil, have been extended to extra virgin olive oil, ordinary virgin olive oil and olive-pomace oil with an objective to protect consumer health and to conform to international quality standards. The standards of quality for other forms of olive oil have come into force from July 2013.
"Now, all types of olive oil need to match limits set to trace metals like copper and iron, insoluble impurities, refractive index, saponification and iodine value. Any variation can amount to violation of the norms of the Food Safety and Standards Act 2006 and incur punishment," said FDA joint commissioner (food) Shashikant Kekare.
"The products covered under the provisions of this standard should comply with maximum permissible limit of lead and arsenic not exceeding 0.1mg/kg," said Dilip Sangat, assistant commissioner (food), Pune division.
By the end of March 2011, India's total import of olive oil was 5,044 metric tonne (MT). In 2012, it grew to 7,163 MT, registering a growth rate of 42%. European olive oil types continue to dominate import with about 85% share with 48% coming from Spain and 36% from Italy, according to the Indian Olive Association.
In the first three quarters of the last financial year, April-December 2012, India imported 8,000 MT, which is expected to increase to over 10,000 MT in the current year. According to Indian Olive Association data, imports of olive oil in India surged by 66% to 11,916.76 tonne in the fiscal ended on March 31, 2013.
India is emerging as one of the fastest growing markets for olive oil, largely due to rising cases of diabetes, hypertension and heart diseases.
Quality factors
Refined olive oil: It is obtained from refining methods which do not lead to alteration in the initial glyceridic structure and it has a free fatty acid (FFA), expressed as oleic acid (which is a powerful anti-oxidant) of not more than 0.3 gram per 100 gram. (FFA is considered as an indicator of freshness and quality)
Olive oil: A blend of refined olive oil and virgin olive oil suitable for human consumption and it has FFA of not more than 1 gram per 100 gram
Extra virgin oil: Virgin olive oil with FFA of not more than 0.8gram per 100 gram
Virgin olive oil: Virgin oil with FFA of not more than 2.0 gram per 100 gram
Ordinary virgin oil: Virgin olive oil with FFA of not more than 3.3 gram per 100 gram
Refined olive-pomace oil: Oil obtained from crude olive-pomace oil by refining methods which do not lead to alterations in the initial glyceridic structure and has a FFA of not more than 0.3 gram per 100 gram
Olive-pomace oil: A blend of refined olive-pomace oil and virgin olive oil and it has a FFA of not more than 1 gram per 100 gram

Adulterated mustard oil seized from Market Yard

During a routine check at Market yard, Food and Drug Administration (FDA) officials unearthed a racket wherein a trader was selling blended oil, claiming it was mustard oil.

FDA officials seized nearly 2,445 litres, worth approximately Rs 2 lakh, of the product being sold under the brand name ‘gau chap’. According to FDA officials, on Thursday, they were conducting a check when they came across a unit — Agarwal Trading Company — that was selling the oil.

Mixed up: Blended oil seized by the FDA from the Market Yard on Thursday

“When we received information from food safety officers, we raided the place and seized the ‘gau chap’ oil from the trader. The packaging mentioned the oil as mustard oil, but when we checked the fine print it said blended oil.
This is totally misleading,” said Dilip Sangat, assistant commissioner, FDA (Food). FDA officials have also found that product was not certified by the government. According to the Food Safety and Standards Act, 2006, there should be an Agmark certification for such blended oil, “There is no Agmark on the packaging, so this is a violation of norms,” added Sangat.
Suspecting that several shopkeepers haves stocked the product, officials have recalled the product from traders, and have also appealed to citizens to return the oil to shopkeepers. FDA authorities have also got in touch with their counterparts in Rajasthan where the manufacturer is based.
“We have notified the Rajasthan FDA officials to act against the manufacturer. We are also checking whether the same oil is given to other distributors and have called back the oil from shopkeepers,” said Sangat.
According to officials, the oil is blended with 60 percent mustard oil and 40 percent rice bran oil. FDA has seized around 51 oil tins of 15 litres, 136 cans of 5 litres and 2,000 plus half-litre packets of the mustard oil from the unit.
2,445 Litres of blended mustard oil seized from the Market Yard by FDA officials  

DINAMALAR NEWS


சேலம் பெரமனூர், அழகாபுரத்தில் போலி குளிர்பான தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு 2 பேர் கைது- 700 பாட்டில்கள் பறிமுதல்

சேலம், செப்.22-
சேலம் பெரமனூர், அழகாபுரத்தில் போலி குளிர்பான தொழிற்சாலைகள் நடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்து அதற்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 700 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி குளிர்பானம் தயாரிப்பு
சேலம் அழகாபுரம், பெரமனூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் பிரபல குளிர்பான நிறுவனங்களின் பெயரில் அனுமதியின்றி தொழிற்சாலை நடத்தி போலியாக குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு தலைமையில் சூரமங்கலம் உதவி கமிஷனர் சந்திரசேகரன், அழகாபுரம் இன்ஸ்பெக்டர் கபிலன், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று மாலை பெரமனூர் மெயின்ரோட்டில் உள்ள அய்யனாரப்பன் கோவில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பிரபல முன்னணி குளிர்பான நிறுவனங்களின் பெயரில் அனுமதியின்றி போலியாக குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்ததும், அந்த குளிர்பானங்கள் டாஸ்மாக் பார்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து ஒரு ஆண்டாக போலி குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்த ஓமலூர் காமலாபுரத்தை சேர்ந்த குமார் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், குடோனில் வைத்திருந்த குளிர்பான பாட்டில்களையும், குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்திய கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், அழகாபுரம் பெரியான்வட்டம் குட்டத்தெருவில் சித்தையன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு முன்னணி குளிர்பான நிறுவனத்தின் பெயரில் போலியாக குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்ததும், முன்னணி நிறுவன பெயரில் மினரல் வாட்டர் கேன் தயாரித்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வீட்டில் வைத்திருந்த போலி குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் கேன்களையும் பறிமுதல் செய்தனர்.
பேட்டி
இது குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு நிருபர்களிடம் கூறுகையில், முன்னணி நிறுவனத்தின் பெயரில் அனுமதியின்றி குளிர்பானம், தண்ணீர் தயாரித்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் 2 இடங்களில் சோதனை நடத்தினோம். அப்போது தொழிற்சாலைகளில் போலியாக குளிர்பானம், தண்ணீர் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 700 குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

ராஜபாளையம் பகுதியில் 560 கிலோ கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்

ராஜபாளையம், செப்.19-
ராஜபாளையம் பகுதியில் 560 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சோதனை
ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையம் பீமராஜா சாலையில் கலப்படத் டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கவிக்குமார் மற்றும் ராஜபாளையம் நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகளுக்கு ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் சுமார் 560 கிலோ கலப்படத் டீத்தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கலப்படத் டீத்தூள் மாதிரி எடுக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 560 கிலோ கலப்படத் டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பழனிச்சாமி என்பவர் தனது குடோனில் வைத்து கலப்படத் டீத்தூளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.
மேலும் கோவை, திருப்பூர், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை வாங்கி வந்து ராஜபாளையம் தாலுகா முழுவதும் கடைகளில் விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்தது.
சட்டப்படி நடவடிக்கை
இது குறித்து நியமன அலுவலர் கவிக்குமார் கூறும்போது, “கலப்பட டீத்தூள் விற்பனை செய்த கடை உரிமையாளர் பழனிச்சாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சோதனைகள் நகர் மற்றும் கிராமப்பகுதி கடைகளில் தொடர்ந்து நடைபெறும்.
சட்டத்திற்கு மீறி செயல்படும் வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்புச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற கலப்பட டீத்தூள்களை கடைஉரிமையாளர்கள் விற்பனை செய்யவோ, வாங்கி உபயோகிக்கவோ வேண்டாம்என்றார்.