Feb 7, 2016

சேலம் வெல்ல ஏல மண்டிக்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுடன் வியாபாரி கடும் வாக்குவாதம்

சேலம், பிப்.7:
சேலத் தில் வெல்ல மண் டிக்கு ஆய் வுக்கு சென்ற அதி கா ரிக் கும், வியா பா ரிக் கும் இடையே கடும் வாக் கு வா தம் நடந் த தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
சேலம் சிவ தா பு ரம் மூலப் பிள் ளை யார் கோயில் அருகே, மாவட்ட கரும்பு வெல்ல உற் பத்தி விவ சா யி கள் சங் கம் செயல் பட்டு வரு கி றது. இந்த சங்க வளா கத் தில் உள்ள வெல்ல மண் டி யில், ஞாயிறு தவிர மற்ற நாட் க ளில் வெல்ல ஏலம் நடை பெ றும். நேற்று காலை வழக் கம் போல் ஏலம் தொடங் கிய சிறிது நேரத் தில், உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா, அதி கா ரி க ளு டன் அங்கு வந் தார். அப் போது காரில் வெளியே செல்ல முயன்ற வெல்ல வியா பாரி தர் என் ப வரை தடுத்த அதி கா ரி கள், கூட் டம் நடத்த வேண்டி இருப் ப தால் அதில் பங் கேற் கு மாறு அழைத் த னர். ஆனால் தர், தனக்கு முக் கி ய மான வேலை இருப் ப தால் வெளி யில் செல்ல வேண் டும் என் றார். அப் போ து கண் டிப் பாக கூட் டத் தில் கலந்து கொள்ள வேண் டும் என தெரி வித்த அனு ராதா, வியா பா ரி கள் யாரும் வெளியே செல்ல முடி யா த வாறு கேட்டை மூடு மாறு காவ லா ளிக்கு உத் த ர விட் டார். இத னால் அதி கா ரி க ளு டன் கடும் வாக் கு வா தத் தில் ஈடு பட்ட தர், வெல்ல ஏலத்தை நிறுத் து மாறு வியா பா ரி க ளி டம் கூறி னார். அப் போது அதி கா ரி கள், ஏலம் முடிந்த பின் னர் கூட் டத்தை வைத் துக் கொள் ள லாம் என் ற னர். இந் நி லை யில் அனு ராதா, துணை கமி ஷ னர் செல் வ ராஜை செல் போ னில் தொடர்பு கொண்டு, வெல்ல வியா பா ரி கள் தன்னை பணி செய்ய விடா மல் தடுப் ப தாக கூறி னார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த அன் ன தா னப் பட்டி போலீ சா ரி டம், தன்னை தர் மிரட் டு வ தா க வும், பணி செய்ய விடா மல் தடுப் ப தா க வும் புகார் அளித் தார். போலீ சா ரின் பேச் சு வார்த் தைக்கு பின் னர் ஏலம் தொடர்ந்து நடந் தது. இது குறித்து அனு ராதா கூறு கை யில், ‘‘வழக் கம் போல் மண் டிக்கு ஆய் வுக்கு வந் தோம். பாது காப் பான முறை யில் வெல் லம் கொண்டு வரு வது குறித்த கூட் டத் தில் கலந்து கொள் ளத் தான் தரை வலி யு றுத் தி னேன். ஆனால், அவர் மீது ஏற் க னவே 6 மாதத் திற்கு முன்பு கொடுத்த புகாரை மன தில் வைத்து, வேண் டு மென்றே வாக் கு வா தத் தில் ஈடு பட் டார் ’’ என் றார்.
வியா பாரி தர் கூறு கை யில், ‘‘ஏலத்தை முடித் துக் கொண்டு, சொந்த வேலைக் காக வெளியே சென்ற எனது காரை அனு ராதா தடுத்து நிறுத்தி, கூட் டத் தில் கலந்து கொள் ளும் படி உத் த ரவு போட் டார். பின் னர் காவ லா ளி யி டம் கேட்டை பூட்ட சொல்லி உத் த ர விட் டார். கூட் டம் நடத் து வது என் றால் முன் கூட் டியே தக வல் தெரி விக்க வேண் டும். திடீ ரென கூட் டத் தில் கலந்து கொள்ள வேண் டும் என்று உத் த ரவு போட்டு, கேட்டை பூட் டு வது எந்த விதத் தில் நியா யம்?. முத லில் கேட்டை மூட சொன் ன தற்கு அவர் விளக் கம் அளிக்க வேண் டும். கடந்த 6 மாதத் திற்கு முன், கலப் ப டம் என கூறி 2526 வெல்ல சிப் பங் களை பறி மு தல் செய் த னர். இதனை கடந்த 28ம் தேதி விற் ப னைக்கு அனு ம தித் துள் ள னர்.
இது தொடர் பாக அதி கா ரி கள் உரிய விளக் கம் அளிக்க வேண் டும்,’’ என் றார்.

கேட்டை இழுத்து மூடுங்க...: வெல்ல மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் தடாலடி

சேலம்: வெல்ல மார்க்கெட்டில் நேற்று ஏலம் நடந்த போது உள்ளே நுழைந்த உணவு பாதுகாப்பு அலுவலர், 'கேட்டை இழுத்து மூடுங்கள், யாரும் வெளியே செல்லக்கூடாது' என கூறி, 3 மணி நேரத்துக்கும் மேல், உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளை சிறை பிடித்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரியின் மீது, போலீசில் புகார் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு அலுவலரின் இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், செவ்வாய்பேட்டையில் உள்ள வெல்ல மார்க்கெட்டில், தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்களில், வெல்லம் விற்பனைக்கு வருவதும், அதை ஏலத்தின் அடிப்படையில், வியாபாரிகள் கொள்முதல் செய்வதும் வழக்கம்.
இழுத்து மூட உத்தரவு: 
நேற்று காலை ஏலத்தின் போது, அங்கு வந்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, 'வாகனங்கள் மட்டுமின்றி, ஆட்களும் யாரும், நான் கூறும் வரை மார்க்கெட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது' என, கூறி கேட்டை இழுத்து மூட உத்தரவிட்டார். இதில், வெல்ல வியாபாரி ஸ்ரீதர் என்பவர், 'ஆட்களை சிறை பிடிக்கவோ, வெளியே செல்லக்கூடாது என கூற அதிகாரம் இல்லை' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசை வரவழைத்த அனுராதா, தன்னை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, ஸ்ரீதர் மீது புகார் அளித்தார். இப்பிரச்சனையால், காலை, 8.30 மணியிலிருந்து, 12 மணி வரை, யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை உணவுக்கு கூட வெளியே செல்ல முடியாத விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். 'எதற்காக கேட்டை மூடி வைத்துள்ளீர்கள்?' என அனுராதாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பி பின், 'நான் எதுவும் கூறவில்லையே!' என கூறி விட்டு, 12 மணிக்கு மேல் கேட்டை திறக்க உத்தரவிட்டார்.
வெல்லத்தை காணவில்லையாம்: 
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது: கடந்த, ஏழு மாதங்களுக்கு முன் உற்பத்தியாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 2,565 மூட்டை வெல்லத்தை, உற்பத்தியாளர் சங்கத்தின் பொறுப்பில் வைத்திருந்தேன். பிப்ரவரி, 3ம் தேதி வந்து பார்த்த போது, பறிமுதல் செய்த வெல்லம் காணவில்லை. அதற்கு விளக்கம் தரும்படி, உற்பத்தியாளர் சங்கத்துக்கு நோட்டீஸ் தர வந்தேன். வெல்லம் கொண்டு செல்லும் போது, மூடியபடி கொண்டு செல்ல வேண்டும் என, அறிவுறுத்தியபோது, ஸ்ரீதர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவர் மீது புகார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 
வாய்மொழி அனுமதி
சேலம் மாவட்ட கரும்பு வெல்லம் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ரமேஷ்குமார் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட, 2,565 மூட்டை வெல்லத்தை உணவு பாதுகாப்பு அலுவலர் எடுத்துக்கொள்ள வாய்மொழியாக அனுமதியளித்தார் எனக்கூறி, சங்க நிர்வாகிகள் ராஜாமணி உள்ளிட்டோர் தலைமையில், கடந்த ஜனவரி, 28 ம் தேதி அனைத்து வெல்ல மூட்டைகளையும் உரிமையாளர்கள் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து நான் உறுதிபடுத்திக்கொள்ள, உணவு பாதுகாப்பு அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. தற்போஆ நான் அனுமதியளிக்கவில்லை என, எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளார். இது பற்றி, சங்கத்தின் செயற்குழுவை கூட்டி மேல் நடவடிக்கைக்கு முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
நாடகம் ஆடுகிறார்
புகாருக்குள்ளான வியாபாரி ஸ்ரீதர் கூறியதாவது: நான் அவசர வேலை காரணமாக வெளியே செல்ல முயற்சித்த போது, உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருமையில் திட்டினார். மார்க்கெட்டில் உள்ள வெல்லத்தை பறிமுதல் செய்யட்டும், சோதனை செய்யட்டும், ஆட்களை வெளியே செல்லக்கூடாது என, கூறி சிறைபிடிக்க அதிகாரம் உள்ளதா எனக்கேட்டது தவறாம். இவர் வாய்மொழியாக அனுமதியளித்த பின் தான், கெட்டுப்போன, 2,565 மூட்டை வெல்லத்தை எடுத்துப்போனதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதை மறைக்க இங்கு நாடகம் ஆடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Food Safety official inspects jaggery godown

District Food Safety Officer T. Anuradha inspecting a jaggery godown at Shevapet in Salem on Saturday
Stating that 2,630 gunny bags of adulterated jaggery, each weighing 30 kg that were seized and stocked at a godown in Shevapet were taken away by merchants, District Designated Food Safety Officer T. Anuradha inspected the godown here on Saturday.
She said that the bags were seized in July 2015 and were stocked in the godown.
Samples tested in laboratory confirmed that jaggery was adulterated as it was made from sugar and by diluting chemicals.
However, she said that all the bags were missing from the godown.
When she was conducting inquiry, a merchant opposed it. Annathanapatti police was informed.
She lodged a complaint that the merchant prevented her from performing her duty. The police are investigating into the incident.
A notice was also served to the Salem District Sugar Jaggery Manufacturers and Farmers Association under whose custody the gunny bags were earlier kept.

4.5 quintals of spices destroyed in Srinagar

Srinagar, Feb 7 (UNI) About 4.5 quintals of spices, including turmeric, chillies and saunf power had been destroyed by the Drug and Food Control (D&FC) in the summer capital, Srinagar, including in the civil lines.
An official spokesperson said here today that complaints were received that some traders, particularly roadside vendors, were selling open powdered spices in the market in the city.
He said a team of Food Safety Officers of D&FC organisation inspected various markets of Srinagar city including Batmaloo, Hari Singh High Street (HSHS), Saraibala, Lal Chowk, Kokerbazar and other areas to check the sale of open powdered spices which is prohibited under Food Safety and standard Act 2006 Rule 2011.

4.5 quintals of spices destroyed

SRINAGAR, Feb 6: A team of Food Safety Officers of Drug and Food Control Organization inspected various markets of Srinagar city including Batmaloo, HSHS, Saraibala, Lal Chowk, Kokerbazar and other areas to check the sale of open powdered spices which is prohibited under Rule 2, 3, 14, 15 of Food Safety and standard act 2006 Rule 2011.
The team destroyed about 4.5 quintals of spices including turmeric, chilies and saunf powder etc.
Accordingly, all the Food Business operators have been warned not to sell or store open spice powder or else strict action under rules shall be initiated against them.