Jun 14, 2017

பிளாஸ்டிக் அரிசி குறித்து ஆய்வு கருத்தரங்கில் அதிகாரி தகவல்

சேத்துார்;''பிளாஸ்டிக் அரிசி குறித்து மாவட்ட வாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக,'' மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி அனுராதா கூறினார்.
சேத்துார் அருகே செட்டியார்பட்டியில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தளவாய்புரம் செட்டியார்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 40க்கு மேற்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய உணவு பாதுகாப்பு அதிகாரி, '' உணவு பொருட்கள் தயாரிக்கும் இடம், அரிசி ஆலைகள் சுத்தமாக இருக்க வேண்டும். உடல்நலக் கேட்டை ஏற்படுத்தக்கூடிய, உலோக நச்சுத்தன்மை உடைய சாதனங்கள் கொண்டு உணவு தயாரிக்கவோ, சேகரிக்கவோ கூடாது.
பணியாளர்கள் பணியை தொடங்கும் போதும், பணியை முடித்த பின்பும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். ஆலை உரிமையாளர்கள் ஆலை உரிமத்தை குறிப்பிட்ட தேதி தவறாமல் புதுப்பிக்க வேண்டும்.
மாவட்டம் வாரியாக அரிசி ஆலைகளில் உணவுதுறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.பிளாஸ்டிக் அரிசி இருக்கும் பட்சத்தில் ஆலை உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ,''என்றார்.
தளவாய்புரம் நெல் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் ராமர், பொருளாளர் மாரிமுத்து ,உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சக்திகணேஷ், மாரிமுத்து, கருப்பையா கலந்து கொண்டனர். சங்க தலைவர் ஆனந்தன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment