Jun 24, 2017

ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

தலைவாசல்: ஓட்டல்களில், பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். தலைவாசல், வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட சாலையோர ஓட்டல்கள் செயல்படுகின்றன. அவற்றில், வாழை இலைக்கு பதில், பெரும்பாலும் பிளாஸ்டிக் பேப்பர்களே பயன்படுத்தப்படுகின்றன. அதில், சூடான உணவு பொருட்கள் வைக்கும்போது, பேப்பர் வாசம் வீசுகிறது. குழந்தைகள் சாப்பிடும்போது, வாந்தி உள்ளிட்ட உபாதை ஏற்படுகிறது. மேலும், பேப்பர்களை சாக்கடையில் வீசுவதால், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment